யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மக்களவையில் இன்று நம்பிக்கை தீர்மானம் தாக்கல்
புதுடெல்லி (ஏஜென்சி), 21 ஜூலை 2008   ( 08:56 IST )
நாடாளுமன்மக்களவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் நாளில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்கிறார்.

மக்களவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் தொடங்குகிறது.

அப்போது, `அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற ஒற்றை வரியைக் கொண்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்யும் பிரதமர், அதன் மீதான விவாதத்தையும் தொடங்கி வைத்துப் பேசுவார்.

பிரதமர் மன்மோகன் சிங், தனது அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் நன்மைகளையும் அவர் எடுத்துரைப்பார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற, தனது அரசை ஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்கொள்வார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து கட்சிகளின் தலைவர்களும் விவாதத்தில் பங்கேற்று தங்கள் தரப்பு கருத்துக்களைத் தெரிவிப்பர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரும் விவாதத்தின் பங்கேற்பர் என தெரிகிறது.

மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்டோர் அரசு சார்பில் களமிறங்குவர்.

இதில், இடதுசாரிகள் உறுப்பினர்களும், பாஜக தலைவர்களும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று, மத்திய அரசையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் சாடி பேசுவர்.

இன்றும் நாளையும் சேர்த்து மொத்தம் 16 மணி நேரம், நடத்தப்படவுள்ள விவாதத்தின் முடிவில் நாளை மாலை நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.

அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுமா? அல்லது தோற்கடிக்கப்படுமா என்பது தெரியவரும்.

மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 545. இவற்றில் 2 இடங்கள் காலியாக உள்ளன; ஓர் உறுப்பினருக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் ஆதரவு வாக்குகளும், எதிர்ப்பு வாக்குகளும் சமமாக இருந்தால் மட்டுமே, சபாநாயகர் வாக்களிக்க முடியும். எனவே, வாக்குரிமையுள்ள மக்களவை 541 உறுப்பினர்களில், குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெற அரசுக்கு 271 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எம்பிக்களுக்கு சோனியா, அத்வானி இன்று விருந்து!
ஜம்மு: ராணுவ தளபதி சுட்டுக்கொலை
அனைத்துக் கட்சிகளுடன் சோம்நாத் நாளை ஆலோசனை
பிரதமராகிறார் மாயாவதி: இன்று ஆலோசனை
ஆதாயம் காங்.கிற்கு... பின்னடைவு சமாஜ்வாதிக்கு !
அரசை நிச்சயம் தோற்கடிப்போம் : யெச்சூரி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...