|
| எம்பிக்களுக்கு சோனியா, அத்வானி இன்று விருந்து! |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008 ( 16:12 IST ) | |
மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களது ஆதரவு எம்பிக்கள் கடைசி நேரத்தில் எதிர் முகாமுக்கு மாறுவதை தடுக்கும் வகையில், சோனியா, அத்வானி ஆகியோர் தங்களது ஆதரவு எம்பிக்களுக்கு இன்று இரவு தனித்தனியாக விருந்து வைக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக நடந்து வந்த அரசியல் பேரங்களுக்கு இடையே, 5 எம்பிக்களை கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபுசோரன் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், தலா 2 எம்பிக்களை கொண்ட அசாம் கன பரிஷத், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து வாக்களிப்போவதாக இன்று அறிவித்துள்ளன.
சிவசேனா கட்சி அரசை எதிர்த்து வாக்களிப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது.
தற்போதைய நிலவரப்படி, ஐமுகூ அரசுக்கு ஆதரவாக தற்போது 260 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற மேலும் 12 எம்பிக்கள் தேவை.
இதனால், யாருக்கு வாக்களிப்பது என்றும் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் எம்பிக்களை இழுக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது ஆதரவு எம்பிக்கள் கடைசி நேரத்தில் எதிர் முகாமுக்கு தாவுவதை தடுக்கும் வகையில், அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று விருந்து வைக்கிறார்.
இதேபோன்று, பாரதிய ஜனதா தலைவர் அத்வானியும் ஐமுகூ அரசுக்கு எதிராக தங்கள் பக்கமுள்ள எம்பிக்களுக்கு இன்று விருந்து வைக்கிறார்.
மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இன்னும் 48 மணி நேரத்தும் குறைவாகவே உள்ளன. இதனால், டெல்லி அரசியல் வட்டாரம் முன் எப்போது இல்லாத வகையில் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|