யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதமராகிறார் மாயாவதி: இன்று ஆலோசனை
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008   ( 12:01 IST )
மக்களைவையில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை வீழ்த்தி, மாயாவதி தலைமையில் புதிய அரசு அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் மற்றும் 3வது அணி கிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றதும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ அரசை வீழ்த்துவதற்காநடவடிக்கைகளில் இடதுசாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அடுத்த பிரதமராக மாயாவதியை ஆட்சி பீடத்தில் ஏற்றுவது தொடர்பான நடவடிக்கைகளில் தற்போது இடதுசாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு பெரிதும் நம்பிய சமாஜ்வாடி கட்சி உடைந்து, அதிருப்தி எம்.பிக்கள் 4 பேர் மாயாவதி பக்கம் சாய்ந்து விட்டனர். இதன் முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கும் நேற்று கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காகவும், மன்மோகன் சிங் அரசை வீழ்த்துவதற்கான வியூகம் அமைப்பதற்காகவும் எதிரணியின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 3வது அணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

எதிரணியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஐமுகூ அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆதாயம் காங்.கிற்கு... பின்னடைவு சமாஜ்வாதிக்கு !
அரசை நிச்சயம் தோற்கடிப்போம் : யெச்சூரி
அரசுக்கு ஆதரவு: சிபுசோரன் கட்சி எம்.பி.க்கள் தன்னிச்சை முடிவு
காங்.கிற்கு 280 எம்.பி.க்கள் ஆதரவு : மொய்லி
சோனியா இல்லத்தில் காங். எம்.பி.க்கள் அணிவகுப்பு
மார்க்சிஸ்ட் செயற்குழு: இன்று கூடுகிறது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...