யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஆதாயம் காங்.கிற்கு... பின்னடைவு சமாஜ்வாதிக்கு !
புதுடெல்லி( ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008   ( 18:41 IST )
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நம்பிக்கை அளித்த மாஜ்வாதி கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷாகித் சித்திக், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு தேர்தலில் கணிசமான இடங்கள் கிடைப்பதற்கு இஸ்லாமிய வாக்கு வங்கிகளும் ஒரு முக்கிய காரணமாகும்.இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிகளை திரட்டிக் கொடுத்ததில் கட்சியின் பொதுச் செயலாளரான சித்திற்கும் முக்கிய பங்குண்டு.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து, வருகிற 22 ம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி வாக்களிப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி சித்திக் தமது கட்சிப் பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் மாயாவதியின் சமாஜ்வாதி கட்சியிலும் இணைய முடிவு செய்துள்ளார்.

அதே சமயம் சித்திக்கை பின்பற்றி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மேலும் பல முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்களும் மாயாவதி கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சித்திக் மாநிலங்களவை உறுப்பினர் என்பதால், அவரது விலகல் நம்பிக்கை வாக்கெடுப்பை பாதிக்காது என்றாலும், அவரை பின்பற்றி சமாஜ்வாதியின் அதிருப்தி எம்.பி.க்கள் பலர் அணி தாவுவது நிச்சயம் என்றே தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற சமாஜ்வாதி கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் மொத்தமுள்ள 39 எம்.பிக்களில் 16 பேர் மட்டுமே கலந்து கொண்டதை சுட்டிக்காட்டும் டெல்லி வட்டாரங்கள், அக்கட்சியை சேர்ந்த மேலும் பல தலைவர்கள், நிர்வாகிகள் மட்டுமல்லாது எம்.பிக்களும் அணி தாவுவது நிச்சயம் என்று கூறுகின்றன.

சமாஜ்வாதி கட்சிக்கு இந்த பின்னடைவு அந்த கட்சியை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனெனில் அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதை, சமாஜ்வாதியிடம் உள்ள 39 எம்.பி.க்கள் ஆதரவையும், சில உதிரி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆதரவையும் வைத்து சமாளித்து விடலாம் என கணக்கு போட்டிருந்தது காங்கிரஸ்.

ஆனால் அந்த கணக்கு தற்போது தப்பாக போய்விடுமோ என்ற எண்ணம் காங்கிரசிடம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இத்தகைய அணி தாவல் இருக்கும் என்று எதிர்பார்த்தோ என்னவோ சிவசேனா மற்றும் அகாலி தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவாறு சில ரகசிய பேரங்களை காங்கிரஸ் நடத்தி முடித்துள்ளதாக தெரிகிறது.

இதனை காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் வீரப்ப மொய்லியும் இன்று உறுதிபடுத்தினார்.சிவசேனா மற்றும் அகாலி தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள் என அவரே இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

மேலும் 280 க்கும் அதிகமான எம்.பிக்களின் ஆதரவும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.

அவர் இந்த அளவுக்கு பகிரங்கமாக கூறுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளின் எம்.பிக்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும், சில பா.ஜனதா எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளச் செய்யாமல் இருக்கவும், ரகசிய பேரங்களை காங்கிரஸ் நடத்தி முடித்துள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு வெற்றி பெற்றாலும், பின்னடைவு என்னவோ தமது கட்சியில் பிளவை சந்திக்கப் போகும் முலாயமுக்குத்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் !
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசை நிச்சயம் தோற்கடிப்போம் : யெச்சூரி
அரசுக்கு ஆதரவு: சிபுசோரன் கட்சி எம்.பி.க்கள் தன்னிச்சை முடிவு
காங்.கிற்கு 280 எம்.பி.க்கள் ஆதரவு : மொய்லி
சோனியா இல்லத்தில் காங். எம்.பி.க்கள் அணிவகுப்பு
மார்க்சிஸ்ட் செயற்குழு: இன்று கூடுகிறது
நம்பிக்கை வாக்கெடுப்பு : தவிப்பு, கலக்கம், ஆறுதல்...!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...