யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அரசுக்கு ஆதரவு: சிபுசோரன் கட்சி எம்.பி.க்கள் தன்னிச்சை முடிவு
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008   ( 13:31 IST )
மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது என சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 4 எம்.பி.க்கள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளனர்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரு தரப்பு மீதும் அதிருப்தி கொண்டுள்ள சிபுசோரன், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது நிலைப்பாடு குறித்து பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

ஆயினும், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்க, தனக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவியும், தன்னுடைய மகனுக்கு ஜார்க்கண்ட் மாநில துணை முதல்வர் பதவியும் அளிக்க வேண்டுமென, சிபுசோரன் பேரம் பேசியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மக்களவையில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியோடு, அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்களிக்க தாங்கள் விரும்பவில்லை என்று சிபுசோரனிடமே 4 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு பிரதான எதிரி கட்சியாக பாஜக திகழ்வதே இதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், 5 மக்களவை உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இன்று ஆலோசனை நடத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தமது நிலைப்பாடு குறித்து முடிவு செய்து அறிவிக்கவுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காங்.கிற்கு 280 எம்.பி.க்கள் ஆதரவு : மொய்லி
சோனியா இல்லத்தில் காங். எம்.பி.க்கள் அணிவகுப்பு
மார்க்சிஸ்ட் செயற்குழு: இன்று கூடுகிறது
நம்பிக்கை வாக்கெடுப்பு : தவிப்பு, கலக்கம், ஆறுதல்...!
கவுடா இழுபறி : காங்கிரஸ் தவிப்பு
பலத்தை இழக்கிறது சமாஜ்வாதி ? கலக்கத்தில் காங்.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...