|
| சோனியா இல்லத்தில் காங். எம்.பி.க்கள் அணிவகுப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008 ( 12:55 IST ) | |
மக்களவையில் வரும் 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களை, அக்கட்சி தலைவர் சோனியா காந்தி சந்தித்தார்.
தனது இல்லத்துக்கு அணிவகுத்த கட்சியின் மக்களவை உறுப்பினர்களைச் சந்தித்த சோனியா, நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுவதற்கு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இதில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, பல்வேறு உதிரி கட்சிகளின் ஆதரவினைப் பெறுவதில் தீவிர முயற்சிகளை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|