யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
முகேஷ் அம்பானி விவகாரம்: மா.கம்யூ. புகாருக்கு அரசு மறுப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008   ( 17:31 IST )
கா‌ர்ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்களு‌க்கு இடை‌யி‌லான சுயநல பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌க்கு‌‌‌ம் சமரச மையமாக பிரதமர் அலுவம் மா‌றி‌விட‌க் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று எச்சரித்துள்ள நிலையில், அக்கட்சியின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி மூலமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து, "ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌‌ப்‌பி‌‌ல் ஆளு‌ம் ஐ.மு.கூ‌ட்ட‌ணி வெ‌ற்‌றிபெ‌ற்று ‌மீ‌ண்டு‌ம் ஆ‌ட்‌சி‌க்கு வந்தாலும்கூட, சுயநல‌த்‌தி‌ற்காக‌ச் ச‌ண்டை‌யிடு‌ம் கா‌ர்ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளிடை‌யி‌ல் சமரச‌ம் ஏ‌ற்படு‌த்து‌ம் மையமாக, ‌பிரதம‌ர் அலுவலக‌ம் மா‌றி‌விட‌க் கூடாது" எ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர‌சிய‌ல் தலைமை‌க் குழு ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெரிவித்திருந்தது.

மேலும், த‌ங்களுடைய நல‌ன்களை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க்கொ‌ள்ள அர‌சிய‌ல்வா‌திகளை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம் கா‌ர்ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ள், மக்களவையில் நடைபெறவுள்ள ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் த‌ங்களு‌க்கு ஆதாய‌ம் ‌கிடை‌க்காதா எ‌ன்று அலைந்து வருவதாகவும் அக்கட்சி சாடியிருந்தது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம், "கார்ப்பரேட் நிறுவன தலைவர்களை, பிரதமர் சந்திப்பது எப்போதும் நடைபெறுவதுதான். அத்தகைய சந்திப்பின்போது, தேசிய மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க சோம்நாத் மறுப்பு
123க்கு ஆதரவு: தேசிய மாநாட்டு கட்சி, அகாலி தளம் இன்று முடிவு!
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: மன்மோகன்
பீகார்: ஜீப் கவிழ்ந்து திருமண கோஷ்டியினர் 20 பேர் பலி
ஈரா‌ன் ‌மீது தா‌க்குத‌ல்: இ‌ந்‌தியா எ‌தி‌ர்‌ப்பு
'குதிரை பேரத்தில் ஈடுபடுவது பாஜவும், இடதுசாரிகளும்தான்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...