|
| மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க சோம்நாத் மறுப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), 15 ஜூலை 2008 ( 15:30 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சோம்நாத் சாட்டர்ஜி தனது மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டுமென, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதில் இருந்து மவுனம் காத்து வந்த சோம்நாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக பாஜகவுடன் இணைந்து தாம் வாக்களிக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை சபாநாயகர் பொறுப்பில் நீடிக்கவே தாம் விரும்புவதாகவும் அவர் அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சோம்நாத் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அந்தப் பொறுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக அவரை விலக்க, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாயின.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டபோதே, "மக்களவை சபாநாயகர் பொறுப்பிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் சோம்நாத் சாட்டர்ஜியின் தனிப்பட்ட முடிவு," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் காரத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|