|
| 123க்கு ஆதரவு: தேசிய மாநாட்டு கட்சி, அகாலி தளம் இன்று முடிவு! |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008 ( 13:30 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சி மற்றும் அகாலி தளம் ஆகியவை இன்று முடிவு செய்கின்றன.
லோக்சபையில் வரும் 22ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக சிறிய கட்சிகளின் ஆதரவையும் மத்திய அரசு திரட்டி வருகிறது.
இதுதொடர்பாக, அந்த கட்சிகளின் தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
கடந்த வாரம், தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக, ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சியின் நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.
அதேபோன்று, சண்டிகரில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த இரு கட்சிகளும் இன்று தங்களது முடிவை இன்று அறிவிக்கின்றன.
இதில், சிரோன்மணி அகாலி தளம் கட்சி, 'அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை' என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதனால், இந்த கட்சி தங்களுக்கு ஆதரவளிக்கும் என்று காங்கிரஸ் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|