|
| நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: மன்மோகன் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 15 ஜூலை 2008 ( 12:39 IST ) | |
"லோக்சபையில் வரும் 22ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறும். அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் ஆதரவளிப்பார்கள்" என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது வீட்டில் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசினார். இதன் பின்னர் பிரதமரின் பத்திரிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை:
பாராளுமன்றத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு, அரசுக்கு ஆதரவளிப்பார்கள்.
இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவின் ராணுவத் திட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த ஒப்பந்தம் நமது ராணுவ திட்டங்களிலிருந்து முற்றிலும் அப்பாற்பட்டது.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடது சாரிகள் வாபஸ் பெற்ற பின்னர், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதன் முறை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|