யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதமரை சந்தித்தார் முகேஷ் அம்பானி
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008   ( 18:52 IST )
சமாஜ்வாதி கட்சி மூலமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று ந்தித்துப் பேசினார்.

தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தீவிரமாக முயன்று வருவதாகவும், இது தனது ரிலையன்ஸ் நிறுவனத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால், முகேஷ் அம்பானி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமடைந்துள்ள முலாயங் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்க்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபம் மீது வரி விதிக்க வேண்டும். ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி மண்டலம் என்ற சலுகையை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதே கோரிக்கையை முன்பு இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், சமாஜ்வாடிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அக்கட்சியையே உடைக்கும் வேலையில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாயின.இது நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ள காங்கிரஸ் தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் முகேஷ் அம்பானி, காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் சமாஜ்வாதி கட்சியை உடைக்கும் வேலை வேண்டாம்; பிரச்சனையை பிரதமர் மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து எடுத்துரைத்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதன் எதிரொலியாக பிரதமர் மன்மோகன் சிங்கையும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளையும் முகேஷ் அம்பானி இன்று சந்தித்தார்.

அப்போது அவர் பிரதமரிடம் அதிக இலாபத்தின் மீது வரி விதிக்க கோரிவது எப்படி தவறானது என்று விளக்கியதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியையும் முகேஷ் சந்தித்ததாகவும், அப்போது சமாஜ்வாதி மூலமான தனக்கு வரும் நெருக்கடி குறித்து முகேஷ் எடுத்துரைத்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று பதிலுக்கு சமாஜ்வாதி கட்சியை உடைக்கும் முயற்சி எதையும் மேற்கொள்ள வேண்டாம் என முகேஷை சோனியா கேட்டுக் கொண்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' ஒரு எ‌ம்.‌பி.‌க்கு ரூ.25 கோடி கொடுக்கிறது காங். '
சாலை விப‌த்‌தி‌ல் இ‌ஸ்ரோ‌ ‌வி‌ஞ்ஞா‌னி ப‌லி
அம‌ர்நா‌த்‌‌தி‌ற்கு மேலு‌ம் 804 ப‌க்த‌ர்க‌‌ள் பயணம்
சோனியா மீதான வெளிநாட்டவர் பிரச்சனை வழக்கு ஒத்தி வைப்பு
கா‌ஷ்‌மீ‌ர்: ராணுவ ‌வீர‌ர் ‌வீடு ‌மீது ‌தா‌க்குத‌ல்
அரசுக்கு அமெரிக்கா உறவு பற்றி மட்டும்தான் கவலை : காரத்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...