|
| ' ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி கொடுக்கிறது காங். ' |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008 ( 18:25 IST ) | |
மத்திய அரசைத் தக்கவைக்க ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி வரை தயாராக உள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி தீவிரமான குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியிருப்பதாவது :
இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிய பிறகு, சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 272 எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக தீவிரமான குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது.
ஒரு எம்.பி.யின் ஆதரவைப் பெறுவதற்கு ரூ.25 கோடி வரை செலவிடுவதற்கு காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளது.
பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி எம்.பி.க்களின் ஆதரவைக் கூட பெறுவதற்கு அக்கட்சி தீவிரமாக முயற்சித்து வருகிறது.
குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க அணு சக்தி உதவும் என்று மத்திய அரசு கூறி வருவகிறது.ஆனால் அணு சக்தியால் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை குறைந்தபட்சம் யூனிட் ஒன்று ரூ.5.5 வரை விற்கப்படும்.
அத்துடன் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு ஆகும் செலவுகள் கூட மிகவும் அதிகம். இவ்வளவு செலவு செய்து தயாரிக்கப்படும் அணு மின்சாரம் நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் 7 முதல் 8 சதவீதத்தைத்தான் நிறைவு செய்யும் என்று திட்டக்குழுவே தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|