யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோனியா மீதான வெளிநாட்டவர் பிரச்சனை வழக்கு ஒத்தி வைப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008   ( 17:17 IST )
வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அரசியல் சாசனத்தின் யர் பதவியை வகிக்கலாமா என்பது குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் 8 வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 1999 ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஆட்சியமைக்க வருமாறு சோனியா காந்திக்கு அப்போதைய ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வெளிநாட்டில் பிறந்த ஒருவர் இந்தியாவின் உயர் அரசு பதவியை வகிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து இப்பிரச்சனையில் மத்திய அரசின் நிலையே தங்களது நிலை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

ஆனால் இன்றும் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், இவ்வழக்கு விசாரணையை மேலும் 8 வார காலத்திற்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கா‌ஷ்‌மீ‌ர்: ராணுவ ‌வீர‌ர் ‌வீடு ‌மீது ‌தா‌க்குத‌ல்
அரசுக்கு அமெரிக்கா உறவு பற்றி மட்டும்தான் கவலை : காரத்
மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கினர் இடதுசாரிகள்
' சோம்நாத் இன்று ராஜினாமா செய்வார் '
அணு ஒப்பந்த விவகாரம் : காரத் - மாயாவதி சந்திப்பு
ஜோதிபாசுவை சந்தித்தார் சோம்நாத் சாட்டர்ஜி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...