|
| மத்திய அரசுக்கு தேவகவுடாவும் ஆதரவு |
| பெங்களூரு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008 ( 12:48 IST ) | |
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற சமாஜ்வாதி கட்சியை தொடர்ந்து, தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
கர்நாடகவில் ஆட்சியிலுள்ள பா.ஜனதா, நூலிழை மெஜாரிட்டி பலத்தில்தான் ஆட்சியில் உள்ளது.
குறிப்பாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 6 பேரது ஆதரவுதான் முக்கிய பலமாக உள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச்த் சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்.எல்.ஏக்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர். அத்துடன் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளையும் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.
இந்நிலையில், தமது கட்சியில் மேலும் பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் காங்கிரசுடன் கைகோர்க்க தேவகவுடா தயாராகி விட்டதாக தெரிகிறது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சியைத் தொடர்ந்து மத்திய அரசை தமது கட்சியும் ஆதரிக்கும் என தேவகவுடா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள், கட்சியை உடைத்துக் கொண்டு பா.ஜனதாவில் சேருவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.அதனால்தான் காங்கிரசுடன் கைகோர்க்க நாங்கள் தயாராகிவிட்டோம்.பா.ஜனதாவின் முயற்சியை தோற்கடிக்கப்பதோடு மட்டுமல்லாது அவர்களுக்கு பாடமும் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே தேவகவுடா சொன்ன வார்த்தையை காப்பாற்ற தவறுபவர் என்பதால் அவருடன் மீண்டும் கைகோர்ப்பது அவ்வளவு நல்லதல்ல என கட்சி மேலிடத்தை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் வாங்கலாம் என்பதால் இந்த நேரத்தில் 2 எம்.பி.க்களை வைத்துள்ள தேவகவுடா ஆதரவை பெறுவதில் தவறில்லை என காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|