யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணுசக்தி முகமையை விரைவில் அணுகுவோம்: மன்மோகன்
புதுடெல்லி (ஏஜென்சி), 8 ஜூலை 2008   ( 09:42 IST )
அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டு விடுவோம் என இடதுசாரிகள் உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், கண்காணிப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையை விரைவில் அணுகவிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் நேற்று விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகிறது. அது தொடர்பான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மிக விரைவில் சர்வதேச அணுசக்தி முகமையை அணுகுவோம்" என்றார்.

கண்காணிப்பு ஒப்பந்தம் முடிந்த பிறகு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேகமான நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், "இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பதில் அரசுக்கு எந்த அச்சமும் இல்லை" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காபூலில் பலியான நால்வரின் உடல்கள் இந்தியா வந்தன
ஜூலை 10 ல் இடதுசாரி ஆதரவு வாபஸ்
காபூல் குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் பலி
3 மாநில காங். தலைவர்கள் மாற்றம்
ராஜினாமா முடிவு குறித்து வருத்தம் இல்லை : ஆஸாத்
காபூல் தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...