யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜூலை 10 ல் இடதுசாரி ஆதரவு வாபஸ்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 18:07 IST )
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வருகிற 10 ம் தேதியன்று டதுசாரிகள் வாபஸ் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பேச்சு நடத்த வருமாறு இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தங்களது எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் அரசு பேச்சு நடத்தப் போகிறதா என்பது குறித்து ஜூலை 7 ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்க வேண்டும் என கெடு விதித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. '

இந்நிலையில், கெடு தேதி இன்றுடன் முடிவடைந்த நிலையில் இடதுசாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பிரதமர் மன்மோகன் சிங் ஜி 8 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் அமெரிக்க அதிபர் புஷ்சுடன் நாளை மறுதினம் 9 ம் தேதியன்று பேச்சு நடத்தப் போவதாக அறிவித்துவிட்டார்.

அத்துடன் சர்வதேச அணுசக்தி முகமையுடனும் பேச்சு நடத்த அரசு தயாராகிவிட்டது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் ஆதரவு கிடைத்துவிட்ட தைரியத்தில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தான் விரும்பியபடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில், கெடுவும் இன்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வருகிற 10 ம் தேதியன்று இடதுசாரிகள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என ஃபார்வார்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் தேபப்பிரதா பிஸ்வாஸ் தெரிவித்தார்.

அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என்பது 4 இடதுசாரி கட்சிகளும் இணைந்து ஒருமனதாக எடுத்த முடிவு என்று அவர் மேலும் கூறினார்.

இதனிடையே இடதுசாரிகள் கெடு விதித்து அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு சார்பில் இன்று பிரணாப் முகர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்ற போதிலும், வருகிற 10 ம் தேதியன்று அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி மீண்டும் ஆலோசனை நடத்தலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் அழைப்பு விடுத்துள்ளதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காபூல் குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் பலி
3 மாநில காங். தலைவர்கள் மாற்றம்
ராஜினாமா முடிவு குறித்து வருத்தம் இல்லை : ஆஸாத்
காபூல் தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
காபூல் தாக்குதல் குறித்து பிரணாப் அவசர ஆலோசனை
காஷ்மீர் முதல்வர் ஆஸாத் ராஜினாமா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...