|
| காபூல் குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் பலி |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008 ( 17:09 IST ) | |
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியான 40 பேரில் 4 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர் ; 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பலியான 40 பேரில் இந்திய ராணுவ அதிகாரி ஆர்.டி மேத்தா, இந்திய தூதரகத்தில் பணியாற்றிய வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்ட 4 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மேலும் அங்கு ஏற்பட்டுள்ள அவசர நிலையை மதிப்பீடு செய்வதற்காக நளினி சுரி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரணாப் கூறினார்.
முன்னதாக குண்டு வெடிப்பு குறித்த தகவலறிந்ததும், பிரணாப் முகர்ஜி தலைமையில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே உயர்மட்டக் குழு ஒன்றை காபூலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|