யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜினாமா முடிவு குறித்து வருத்தம் இல்லை : ஆஸாத்
ஸ்ரீநகர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 16:25 IST )
ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது குறித்து தமக்கு வருத்தம் ஏதுமில்லை என குலாம் நபி ஆஸாத் கூறியுள்ளார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது என்ற நிலையில், முதலமைச்சர் பதவியை ஆஸாத் இன்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தமது இந்த முடிவு குறித்து தமக்கு வருத்தம் ஏதுமில்லை என்றும், ஜம்மு - காஷ்மீரை ஊழல் மற்றும் தீவிரவாதமற்ற மாநிலமாக்குவதற்கான அடித்தளத்தை தாம் அமைத்ததாகவும் குலாம் நபி ஆஸாத் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆஸாத், மாநிலத்தில் கட்சித் தாவல் சட்டத்தை கொண்டு வந்ததே தாம்தான் என்றும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட தாம் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும் கூறினார்.

என்னால் இனிமேல் 4 மணி நேரத்திற்கு மேல் தூங்க முடியும் என்றும் ஆஸாத் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காபூல் தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
காபூல் தாக்குதல் குறித்து பிரணாப் அவசர ஆலோசனை
காஷ்மீர் முதல்வர் ஆஸாத் ராஜினாமா
நாகலாந்தில் நிலநடுக்கம்
ஜப்பான் புறப்பட்டார் மன்மோகன்; ஜூலை 9-ல் புஷ் உடன் சந்திப்பு
ஜி-8 மாநாடு: பிரதமர் நாளை ஜப்பான் பயணம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...