|
| காபூல் தாக்குதல் குறித்து பிரணாப் அவசர ஆலோசனை |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008 ( 13:54 IST ) | |
ஆப்கானிஸ்தானில் உள்ள இநதிய தூதரகத்தை குறிவைத்து இன்று நடந்த தாக்குதலையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 141 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய தூதரகத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து இந்திய அரசு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், குண்டுவெடிப்பையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி மற்றும் மூத்த அதிகாரிகள் பிரணாப்பிடம் விளக்கியதாக தெரிகிறது.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|