|
| காஷ்மீர் முதல்வர் ஆஸாத் ராஜினாமா |
| ஸ்ரீநகர்(ஏஜென்சி), 7 ஜூலை 2008 ( 13:01 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற நிலை சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநில முதலமைச்சர் குலாம நபி ஆஸாத், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. முதல் மூன்று ஆண்டுகளில் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முப்தி முகமது முதலமைச்சராக இருந்தார். அவருக்கு பிறகு, காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆசாத் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. தனது அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்ததோடு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் மக்கள் ஜனநாயக கட்சி வாபஸ் பெற்றது.
இதனால், ஆஸாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இழந்தது. இதனையடுத்து 7-ந் தேதிக்குள் (இன்று) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் ஆஸாத்துக்கு கவர்னர் என்.என்.வோரா உத்தரவிட்டார்.
அதன்படி, காஷ்மீர் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை இன்று காலை கூட்டி, தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முதலமைச்சர் குலாம் நபி ஆஸாத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாய்ப்பிலை என்ற சூழ்நிலை உணர்ந்த முதலமைச்சர் ஆஸாத்,சட்டசபை செயலரை சந்தித்து அவையை கூட்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதோடு, கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி கவர்னர் வோராவை சந்தித்த ஆஸாத், தமது அரசின் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
மொத்தம் 89 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கு 24 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அரசில் இருந்து வெளியேறிய மக்கள் ஜனநாயக கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சிறுத்தைகள் கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
ஆனால் கடைசிவரை 3 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமலேயே போய்விட்டதால், வேறு வழியின்றி நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே ஆஸாத் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை கோராது ஏன் என்பது குறித்து கருத்து தெரிவித்த ஆஸாத், எம்.எல்.ஏக்களை விலைகு வாங்கும் குதிரை பேரம் நடைபெறாமல் தடுப்பதற்காகவே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|