யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜப்பான் புறப்பட்டார் மன்மோகன்; ஜூலை 9-ல் புஷ் உடன் சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 10:46 IST )
ஜி - 8 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜப்பான புறப்பட்டார். இந்த மூன்று நாள் பயணத்தின் ஒருபகுதியாக, நாளை மறுதினம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில் நடைபெறும் இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் பிரதமர் மன்மோகன் சிங், உலகப் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்தவுள்ளதாக, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றியும், அதை சமாளிப்பதற்கு எண்ணெய் வள நாடுகளும், அதை பயன்படுத்தும் நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தோனேஷியா, மெக்சிகோ, கொரிய குடியரசு, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் இடையே வரும் 9-ம் தேதி அமெரிக்க அதிபர் புஷ்சை சந்திக்கவுள்ள மன்மோகன் சிங், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேசவுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும், அதுதொடர்பான தற்போதையை நிலையையும் விளக்கவுள்ள அவர், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இறுதி வடிவம் கொடுப்பது தொடர்பாக புஷ்சிடம் ஆலோசனை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜி-8 மாநாடு: பிரதமர் நாளை ஜப்பான் பயணம்!
நம்பிக்கை ஓட்டெடுப்பு: அ‌த்வா‌னிக்கு காங். ப‌திலடி!
அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும்: தாஸ் முன்ஷி
அணுசக்தியால் வெளியுறவு கொள்கை பாதிக்கும்: காரத்
அணுசக்தி: நாளை மறுநாள் ஆதரவு வாபஸ்?
புஷ்சை விட ஆபத்தானவர் அத்வானி : அமர்சிங்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...