யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜி-8 மாநாடு: பிரதமர் நாளை ஜப்பான் பயணம்!
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2008   ( 15:45 IST )
ஜி-8 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்.

அணுசக்தி ஒப்பந்த விவகாரம், இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இடதுசாரிகள் நாளை வரை மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.

இந்த கெடு காலத்துக்குள் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கா விட்டால், பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானிலிருந்து நாடு திரும்புவதற்குள் எங்களது ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் இடதுசாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த பரபரபான சூழ்நிலையில், ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் நடைபெறும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்.

அங்கு, அமெரிக்க அதிபர் புஷ்சை வரும் 9ம் தேதி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் மன்மோகன் சிங்.

இடதுசாரிகளின் மிரட்டல்களுக்கு மத்தியில், பிரதமர் ஜப்பான் செல்வது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நம்பிக்கை ஓட்டெடுப்பு: அ‌த்வா‌னிக்கு காங். ப‌திலடி!
அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும்: தாஸ் முன்ஷி
அணுசக்தியால் வெளியுறவு கொள்கை பாதிக்கும்: காரத்
அணுசக்தி: நாளை மறுநாள் ஆதரவு வாபஸ்?
புஷ்சை விட ஆபத்தானவர் அத்வானி : அமர்சிங்
ஐதேமு கூட்டணியை தியாகம் செய்ய தயார் : சமாஜ்வாதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...