யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கேஸ் சிலிண்டருக்கு தடை கூடாது: இமாச்சல் கோரிக்கை
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008   ( 11:49 IST )
புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதை மத்திய அரசு தடை செய்யக்கூடாது என்று இமாச்சல் பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளன.

ஆனால், இந்த நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்கக் கூடாது என்று இமாச்சல் பிரதேச அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

புதிய சமையல் எரிவாயு வழங்குவது நிறுத்தப்பட்டால், அடுப்பெரிக்க விறகுகளை பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனால் காடுகள் அழியும் அபாயம் உருவாகும்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இமாச்சலில் குறைந்த அளவே சமையல் எரிவாயு பயன் படுத்தப்படுகிறது.

எனவே, புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பது நிறுத்தப்பட்டாலும் கூட, இமாச்சல பிரதேச அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கல்விக் கடனுக்கு உத்தரவாதம்: மத்திய அரசு பரிசீலனை
நாடு திரும்பினார் மன்மோகன் சிங்
கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : 67.8 % வாக்குப் பதிவு
ஊழல் வழக்கு : பிகார் அமைச்சர் ராஜினாமா
திபெத் : சீனாவுக்கு அத்வானி வலியுறுத்தல்
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : ' சிமி ' இயக்க தீவிரவாதி கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...