|
| கோமா நிலைக்கு சென்றார் சுர்ஜித் சிங் |
| நொய்டா (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 13:51 IST ) | |
முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித், ஓரளவு உடல் நலம் தேறியதையடுத்து , வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையை எட்டியதையடுத்து அவர் கடந்த 15 ம் தேதியன்று நொய்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சுய நினைவிழந்து கோமா நிலைக்கு சென்றிவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் புருஷோத்தம் லால் தெரிவித்தார்.
அவரது உடல் நிலையை டாக்டர்கள் குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
91 வயதாகும் சுர்ஜித் , பழம்பெரும் சுதந்திர போராட்ட வீரராவார்.உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சுர்ஜித் , தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இருப்பினும், சக கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் மட்டும் அவர் அங்கம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|