|
| ஜெய்ப்பூரை தவிர்க்க விரும்பாத பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் |
| லண்டன்/ஜெய்ப்பூர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 13:49 IST ) | |
ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பால் 60-க்கும் மேற்பட்டோர் பலியான போதிலும், அந்நகரத்தில் தங்களது விடுமுறை காலத்தை கழிக்க வேண்டும் என்பதில் பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி லண்டனில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, பிரிட்டன் மக்கள் யதார்த்தத்தின் உண்மையை உணர்ந்துள்ளனர்.
இதுகுறித்து செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரிட்டிஷ் டிராவல் ஏஜெண்டுகள் சங்கத்தைச் சேர்ந்த ஃபிரான்ஸ் டியூக் கூறுகையில், "பிரிட்டன் மக்கள் யதார்த்தைப் புரிந்துகொள்வதற்கு 7/7 நிகழ்வு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதன்மூலம் பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்சனை என்பது உணரப்பட்டது. இதனால், தங்களது சுற்றுலா பயணத்தை எவரும் ரத்து செய்யவில்லை," என்றார்.
ஜெய்ப்பூர் சம்பவத்துக்குப் பிறகு, பிரிட்டன் டிராவல் ஏஜெண்டுகளுக்கு வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் வெளிநாட்டுப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக ஏஜெண்டுகள் கூறுகின்றனர்.
மேலும், ஸ்கார்லெட் கீலிங் விவகாரத்துக்குப் பிறகும்கூட, கோவாவுக்கு பயணிப்பதை பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் எவரும் தவிர்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 750,000 பிரிட்டன் நாட்டினர் பயணிக்கின்றனர். இவர்களில், ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா ஆகிய நகரங்களுக்கு ஆயிரக் கணக்கானோர் வருகை புரிவது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|