யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்தியா, பூடானின் 2 நீர்மின் திட்டங்கள்: பிரதமர் அறிவிப்பு
திம்பு / புதுடெல்லி (ஏஜென்சி), 17 மே 2008   ( 11:58 IST )
இந்தியா மற்றும் பூடான் நாடுகள் ஒன்றிணைந்து 2 புதிய நீர்மின் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் வந்துள்ளார். இங்கு புதிதாக அமைந்துள்ள பாராளுமன்றக் கூட்டத்தொடரில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா மற்றும் பூடான் நாடுகள் இணைந்து 2 புதிய நீர்மின் திட்டங்களை விரைவில் நிறைவேற்றவுள்ளது. மேலும் 4 புதிய திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய திட்டங்கள், பூடானிலிருந்து 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு வழங்குவது என்ற இலக்கை எட்ட உதவும். இந்த இலக்கை வரும் 2020ம் ஆண்டில் 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தும் திட்டம் உள்ளது.

தெற்காசியாவில் அமைதியையும், பாதுகாப்பையும் பலப்படுத்த இந்தியா உதவ தயாராக உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பூடானுக்கு வந்த 50வது ஆண்டு நினைவுவிழாவை முன்னிட்டு இரு நாடுகளுக்கிடையே முதல் ரயில்வே இணைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும்.

பூடானின் வாங்க்சுக் முடியாட்சியின் நூறாவது ஆண்டு விழாவை கருத்தில் கொண்டும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பூட்டானுக்கு வந்த 50வது நினைவு விழாவை முன்னிட்டும், பூடான் மாணவர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
மே.வங்கம் : இன்று 3 வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்
தீவிரவாதத்தை ஒடுக்க புதுச் சட்டம் ஏற்க முடியாது : கம்யூ.
கர்நாடகா : 60 % வாக்குப் பதிவு
கோல்கத்தா அருகே வணிக வளாகத்தில் தீ ; 7 பேர் பலி
ஐஎம்எம் : 27 % ஒதுக்கீடுக்கு தடை இல்லை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...