|
| தீவிரவாதத்தை ஒடுக்க புதுச் சட்டம் ஏற்க முடியாது : கம்யூ. |
| ஜெய்ப்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 11:47 IST ) | |
தீவிரவாதத்தை ஒடுக்க பொடா போன்ற தனிச் சட்டம் ஏதும் புதிதாக கொண்டு வந்தால் அதனை தமது கட்சி ஏற்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டி.ராஜா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொடா போன்ற தனிச் சட்டத்தை தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கொண்டு வரவேண்டும் என பா.ஜனதா கூறுவதை ஏற்க முடியாது என்றும், அத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவதை தமது கட்சி ஏற்காது என்றும் கூறினார்.
மேலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலே தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும், அதற்காக தனிச் சட்டம் ஏதும் தேவையில்லை என்றும் ராஜா தெரிவித்தார்.
நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிப்பது சாத்தியம் என்றும் ராஜா மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|