யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடகா : 60 % வாக்குப் பதிவு
பெங்களூரு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 18:45 IST )
கர்நாடகா சட்டசபைக்கு இன்று நடைபெற்ற ரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக, 66 தோகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

இதில், மொத்தம் 589 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், சுமார் ஒரு கோடியே 10 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கிய 66 தொகுதிகளில் நடைபெறும் இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் எடியூரப்பாவும் ஒருவராவார்.

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தபோது சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு சில இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மக்கள் தேர்தலை புறகணித்ததால் ஏற்பட்ட லேசான பரபரப்பை தவிர , வாக்குப் பதிவு பொதுவாக அமைதியாகவே நடைபெற்றதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாக்குப் பதிவு முடிவடைந்ததும் , வாக்குப் பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலிருந்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுக்காப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான இறுதிக் கட்ட தேர்தல், வருகிற 22 ம் தேதியன்று 69 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

கடந்த 10-ம் தேதி 89 தொகுதிகளில் நடந்த முதல் கட்டத் தேர்தலில் 66 சதவிகித வாக்குகள் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோல்கத்தா அருகே வணிக வளாகத்தில் தீ ; 7 பேர் பலி
ஐஎம்எம் : 27 % ஒதுக்கீடுக்கு தடை இல்லை
காஷ்மீரில் 34 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது !
புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு
பிரதமர் மன்மோகன் சிங் பூட்டான் பயணம்
ஜெய்ப்பூர் சம்பவம் : மேலும் 3 நபர்களின் வரைபடம் வெளியீடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...