யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கோல்கத்தா அருகே வணிக வளாகத்தில் தீ ; 7 பேர் பலி
கோல்கத்தா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 16:37 IST )
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கத்தா அருகே உள்ள பர்க்னாஸ் மாவட்டத்தில் உள்ள ணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாயினர்; 23 பேர் காயமடைந்தனர்.

இந்த வணிக வளாக கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் வெல்டிங் பணி நடைபெற்று வந்ததாகவும், அங்கிருந்து கிளம்பிய தீ பொறி காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூடுதல் போலீஸ் எஸ்.பி. பிரவீன் திரிபாதி தெரிவித்தார்.

மூன்று தளங்களை கொண்ட இந்த கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஐந்து தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் , நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை கடைகளின் ஜன்னல்களை உடைத்து தீயணைப்பு படை வீரர்கள் காப்பாற்றினார்கள்.

தீ விபத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 23 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐஎம்எம் : 27 % ஒதுக்கீடுக்கு தடை இல்லை
காஷ்மீரில் 34 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது !
புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு
பிரதமர் மன்மோகன் சிங் பூட்டான் பயணம்
ஜெய்ப்பூர் சம்பவம் : மேலும் 3 நபர்களின் வரைபடம் வெளியீடு
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...