யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஐஎம்எம் : 27 % ஒதுக்கீடுக்கு தடை இல்லை
புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 15:49 IST )
ஐஎம்எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க கல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இந்த தடையை நீக்க கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நேற்று அணுகியது.

இதனைத் தொடர்ந்து இன்று இப்பிரச்சனையில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் , கல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடையை செல்லாது அறிவித்து, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும், வரவிருக்கும் கல்வியாண்டுக்கான நிறுத்தப்பட்டிருந்த மாணவர் சேர்க்கையை தொடரலாம் என்றும் தீர்ப்பளித்தது.

விரைவில் பொதுத் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீரில் 34 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது !
புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு
பிரதமர் மன்மோகன் சிங் பூட்டான் பயணம்
ஜெய்ப்பூர் சம்பவம் : மேலும் 3 நபர்களின் வரைபடம் வெளியீடு
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : சோனியா, சிவராஜ் நேரில் ஆறுதல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...