|
| புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 13:51 IST ) | |
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்தமிழ் ஈழம் கேட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது.
இதுதொடர்பாக, இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 1991ல் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில், அப்போது பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அதன்பின், 1992ல் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் புலிகள் அமைப்புக்கு தடைவிதித்துள்ளன.
இந்நிலையில், புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சட்டவிரோத அமைப்பான விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் இந்த முடிவை இலங்கை வரவேற்றுள்ளது. தீவிரவாதத்துக்கு துணை போவதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக இருப்பது இதன்மூலம் நிரூபணமாகி இருப்பதாக அதிபர் மகிந்தா ராஜபக்சே செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|