|
| பயங்கரவாதத்துக்கு எதிரான அணுகுமுறை : இந்தியா வலியுறுத்தல் |
| யேகடெரின்பர்க்(ரஷ்யா) (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 15:32 IST ) | |
பயங்கரவாதத்துக்கு எதிராக 'எள்ளளவும் பொறுத்துக்கொள்ளாமை' என்ற அணுகுமுறையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யா - இந்தியா - சீனா அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு பரந்துவிரிந்த மாற்றத்தை ஐக்கிய நாடுகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் எந்த உருவத்திலும் வடிவத்திலும் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய பிரணாப் முகர்ஜி, பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' என்ற அணுகுமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கண்டனமும், இரங்கலும் தெரிவித்த ரஷ்ய மற்றும் சீன அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், உலகளாவிய பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து மூன்று நாடுகளின் அமைச்சர்களும் விவாதித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|