யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடகா : நாளை 2 வது கட்ட தேர்தல்
பெங்களூர்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008   ( 15:23 IST )
கர்நாடகவில் நாளை 2 வது கட்சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்கட்ட தேர்தல் கடந்த 10 ம் தேதியன்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கிய 66 தொகுதிகளில் இத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது.

சுமார் 1.10 கோடி வாக்காளர்கள் 66 தொகுதிகளிலும் போட்டியிடும் 589 வேட்பாளர்களின் தலையெழுத்தை தீமானிக்க உள்ளனர்.

இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் பா.ஜனதா கட்சியின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் எடியூரப்பாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளைய தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் 10 மாவட்டங்களில் உள்ள 66 தொகுதிகளிலும் 1,227 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு பணியில் சுமார் 56,000 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெய்ப்பூர் : உ.பி. இண்டர்நெட் மைய உரிமையாளர் கைது
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு
ஜெய்ப்பூர் சம்பவம் : சந்தேகத்துக்குரிய நபரின் வரைபடம் வெளியீடு
தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் பிரணாப் முகர்ஜி !
ஜெய்ப்பூரில் வெடித்தது ஆர்டிஎக்ஸ் குண்டுகள்!
நாளை ஜெய்ப்பூர் வருகிறார் சோனியா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...