|
| ஜெய்ப்பூர் : உ.பி. இண்டர்நெட் மைய உரிமையாளர் கைது |
| லக்னோ (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 13:56 IST ) | |
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையின் முக்கிய திருப்பமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இண்டர்நெட் மைய உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறி இந்தியாவைச் சேர்ந்த ' குரு - அல் - ஹிந்தி ' என்ற முஜாகிதீன் இயக்கம் இரண்டு டிவி சேனல்களுக்கு இ மெயில் அனுப்பியுள்ளது.
அந்த இ மெயிலை , ஒரு டிவி சேனல் ராஜ்ஸ்தான் காவல்துறைக்கு அனுப்பி வைத்தது.
அந்த இ மெயிலை போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில் , அந்த இ மெயில் , உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டம் , ஷாகிபாபாத் என்ற இடத்தில் உள்ள இண்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து ஜ்ய்ப்பூர் போலீஸார் , காஸியாபாத் போலீஸாருக்கு தகவல் அனுப்பியதை தொடர்ந்து , அவர்கள் அந்த குறிப்பிட்ட இண்டர்நெட் மையத்திற்கு சென்று , அதன் உரிமையாளர் மதுக்கர் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்து, போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கைதை காஸியாபாத் போலீஸ் உயரதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தியுள்ளார்.அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதனிடையே அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஜெய்ப்பூர் போலீஸாரும் காஸியாபாத் விரைந்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|