|
| மும்பையில் 'சாத்' பூஜை நடத்த அனுமதி கோருகிறார் லாலு |
| மும்பை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 13:58 IST ) | |
பிகார் மாநில மக்களின் முக்கிய திருவிழாவான 'சாத்' பூஜையை மும்பையிலுள்ள தாதர் - சவுபாட்டி கடற்கரையில் நடத்த ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அனுமதி கோரியுள்ளார்.
மும்பை மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 'சாத் பூஜை' திருவிழாவை கொண்டாடக் கூடாது என்றும், நவ நிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கூறிவருகிறார்.
சமீபத்தில் மும்பையில் பிகார் மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையின்போது பேசிய ராஜ் தாக்க்கரே மேற்கூறிய எச்சரிக்கையை விடுத்திருந்தார்.இதற்கு லாலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ராஜ் தாக்கரே இல்லத்திற்கு முன்பாகவே தாம் ' சாத் பூஜை ' நடத்தப்போவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து , தைரியமிருந்தால் மும்பையில் வந்து ' சாத் பூஜையை ' நடத்தி காண்பிக்குமாறும், அவர் பூஜையை நடத்திவிட்டு எவ்வாறு திரும்பி செல்கிறார் என்பதை பார்த்து விடலாம் என்றும் லாலுவுக்கு ராஜ் தாக்கரே சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில்,மும்பை தாதர் - சவுபாட்டி கடற்கரையில் ' சாத் பூஜை ' நடத்துவதற்கு அனுமதி கோரி தாதர் கடற்கரை காவல் நிலையத்தில் லாலு விண்ணப்பம் அளித்துள்ளார்.
லாலுவின் இந்த நடவடிக்கை , ராஜ் தாக்கரே விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.
தாதர் - சவுபாட்டி கடற்கரை அருகேதான் ராஜ் தாக்கரே வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|