|
| கர்நாடகா தேர்தல் : 50% வாக்குப்பதிவு |
| பெங்களூரு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 18:36 IST ) | |
கர்நாடகாவில் இன்று நடந்து முடிந்த முதல்கட்ட தேர்தலில், 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 5 மணிக்கு முடிந்தது.
இன்றைய தேர்தலில் 440 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 953 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். சுமார் 1.73 கோடி பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன்கள் குமாரசாமி, ராவண்ணா, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா ஆகியோர் உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் இன்று காலை தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
ஒரு சில இடங்களில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கியபோதும், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில், அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பல இடங்களில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்துள்ளது.
இன்றைய முதல்கட்ட தேர்தலில் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|