|
| அணு ஒப்பந்த சிக்கல்கள் : ரைஸிடம் பிரணாப் விளக்கம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 16:12 IST ) | |
அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரிவாக விளக்கியுள்ளார்.
இவ்விரு அமைச்சர்களுக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலில், அண்மையில் நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் உயர்மட்டக் குழு கூட்டத்தின் நிலை குறித்து பிரணாப் முகர்ஜி எடுத்துரைத்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை இயன்றவரை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரைஸ், அதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து பிரணாப் முகர்ஜியிடம் கேட்டுள்ளார்.
அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஆதரித்து வரும் இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் நீடித்து வருவதாக பிரணாப் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இறுதி வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு, இந்த ஒப்பந்தத்துக்கு மே மாத இறுதி வரை கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வலுவாக நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இறுதி வாக்கெடுப்புக்கு செல்லும் முன்பாக, சர்வதேச அணுசக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ள வேண்டும். அத்துடன், அணு எரிபொருள் வழங்கும் (என்எஸ்ஜி) 45 நாடுகளிடமும் பேசவேண்டியுள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் யாவும் இடதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக முடங்கிப்போயுள்ளது.
இந்த எதிர்ப்பின் காரணமாக, சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும்கூட, கண்காணிப்பு ஒப்பந்தம் கையெழுத்திடாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|