யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடகா தேர்தல் : 1 மணி வரை 30% வாக்குப்பதிவு
பெங்களூரு (ஏஜென்சி), 10 மே 2008   ( 14:43 IST )
கர்நாடகாவில் நடைபெற்று வரும் முதல்கட்ட தேர்தலில், மதியம் 1 மணி வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக, 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில் 440 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 953 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 1.73 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

இதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பது தேர்தலில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன்கள் குமாரசாமி, ராவண்ணா, பாரதிய ஜனதா தலைவர் வெங்கய்யா நாயுடு, முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா ஆகியோர் உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் இன்று காலை தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில், மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 1 மணி வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் 16-ம் தேதி 2வது கட்டமாகவும், வரும் 22ம் தேதி 3வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பி.எஸ்.பி.யில் இணைந்தார் முன்னாள் காங். எம்.பி. அகிலேஷ்
ஜம்முவில் வெடிமருந்து குவியல் பறிமுதல்
குஜராத்: சாலை விபத்தில் 12 தொழிலாளர்கள் பலி
கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை : ப.சிதம்பரம் உறுதி
கர்நாடகாவில் நாளை முதல் கட்ட தேர்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace