|
| பி.எஸ்.பி.யில் இணைந்தார் முன்னாள் காங். எம்.பி. அகிலேஷ் |
| லக்னோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 13:41 IST ) | |
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் தாஸ் இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். உத்தரபிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அண்மையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவருமான இவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த அவர், ராகுல் காந்தியைச் சுற்றியுள்ள அதிகார வட்டாரத்தின் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்திருந்தார்.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பனார்சி தாஸின் மகனான அகிலேஷ், கடந்த மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாக, மத்திய எஃகுத்துறை இணையமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|