|
| ஜம்முவில் வெடிமருந்து குவியல் பறிமுதல் |
| ஜம்மு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 13:08 IST ) | |
ஜம்மு - காஷ்மீரில் ஏராளமான வெடிமருந்து மற்றும் ஆயுதக் குவியல்களை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்புப் படையினர் நேற்று முறியடித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர், தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற, சம்பா மாவட்டத்தின் சுஜானி வனப்பகுதியிலிருந்து ஏராளமான வெடிமருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை ராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி, 10 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்கள், 2 டெட்டனேட்டர்கள், கிரானைட் லாஞ்சர்கள், 111 ரவுண்டுகளை கொண்ட நவீனத் துப்பாக்கி, ஒரு ரேடியோ உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|