|
| குஜராத்: சாலை விபத்தில் 12 தொழிலாளர்கள் பலி |
| வதோதரா (ஏஜென்சி), 10 மே 2008 ( 12:43 IST ) | |
குஜராத்தில் லாரி பள்ளத்தில் உருண்டதில் மகாராஷ்டிராவை சேர்ந்த 12 தொழிலாளர்கள் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லாரியில் குஜராத் சென்றனர். அன்க்ளேஷ்வர் என்ற இடத்திலிருந்து பாவ்நகர் மாவட்டத்திலுள்ள வல்லாபிபூர் என்ற இடத்துக்கு லாரி சென்றுகொண்டிருந்தது.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்திலுள்ள கன்பிரா என்ற இடத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி திடீரென அருகேயுள்ள பள்ளத்தில் உருண்டது.
இதில் லாரியில் இருந்தவர்களில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
டிரைவரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|