யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை : ப.சிதம்பரம் உறுதி
புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 18:00 IST )
விலைவாசி உயர்வை‌க் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சித‌ம்பரம் உறுதியளித்துள்ளார்.

பணவீக்க விகிதம் , கடந்த ஏப்ரல் 29 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.61 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில்,
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவையின் கூட்டமும், பொருளார விவகாரங்களுக்கான அமைச்சரவை‌க் குழு கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்தார்.அவர் மேலும் கூறியதாவது:

இன்று வெளியிடப்பட்ட பணவீக்கம் பற்றிய அறிவிப்பு, விலைகள் உயராமல் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.இது பெரிய அளவில் நிம்மதியை கொடுக்கின்றது.விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் உள்ளதையே இது காட்டுகிறது.

அரசு ஏற்கனவே விலைவாசியை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.நான்கு உணவு தா‌னியத்திற்கு முன்பேர சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.உருக்கு ஆலைகள் விலையை குறைக்க சம்மதிக்கவைத்துள்ளது.

சிமெ‌ண்ட் ஆலைகளையும் விலையை குறைக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.இதுவும் நிர்வாக ரீதியான நடவடிக்கைதான். நாங்கள் ஒவ்வொருவரை பற்றியும் கவனத்தில் கொண்டுள்ளோம்.அதனால்தான் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகின்றோம்.

பெட்ரோலிய கச்சா எண்ணெயில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விலை 1 பீப்பாய் 124 டாலராக உயர்ந்துள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில், எந்த நாட்டிலும் பணவீக்கம் உயராமல், நிலையாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கர்நாடகாவில் நாளை முதல் கட்ட தேர்தல்
'அமெரிக்காவை விட இந்திய தனி நபர் உணவு அளவு குறைவு'
இந்தியா வருமாறு ரஷ்ய அதிபருக்கு மன்மோகன் அழைப்பு
ப்ளஸ் 2 - புதுவையில் தேர்ச்சி 4% குறைந்தது
மே.வங்க கவர்னர் மீது ஜோதி பாசு கடும் தாக்கு
அணு ஒப்பந்தத்திற்கு அரசியல் ஒருமித்த கருத்து அவசியம் : கமல்நாத்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace