|
| கர்நாடகாவில் நாளை முதல் கட்ட தேர்தல் |
| பெங்களூரு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 17:26 IST ) | |
கர்நாடகாவில் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக வரும் நாளை 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 16 ம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 22ம் தேதியும் நடைபெறுகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற்ற உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தல் கமிஷனால் தயாராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முதல் கட்டத் தேர்தலில் சுமார் 1.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.440 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 953 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பணியில் சுமார் 1 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் சுமார் 58,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாதுகாப்பு படையினர் இன்று கொடி அணி வகுப்பு நடத்தினர்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் பெங்களூர் நகருக்கு உட்பட்ட 28 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|