யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'அமெரிக்காவை விட இந்திய தனி நபர் உணவு அளவு குறைவு'
புனே (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 16:39 IST )
இந்தியர்களின் தனி நபர் உணவு அளவு அமெரிக்க தனி நபர் உணவு அளவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

புனேவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷரத் பவாரிடம் , சர்வதேச அளவில் உணவு தானியங்களின் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றத்திற்கு இந்தியர்களின் அதிகரித்துள்ள உணவுப் பழக்கவழ‌க்கமே காரண‌ம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியது பற்றி கேட்டபோது, இவ்வாறு பதிலளித்தார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உலக உணவு தானிய சந்தை அறிக்கை நிலவரப்படி 2007- 08ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உணவு தானிய நுகர்வு 11.81 விழுக்காடு அதிகரித்து 310.4 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

மாறாக இந்தியாவில் உணவுத் தானிய நுகர்வு இதே காலக் கட்டத்தில் வெறும் 2.17 விழு‌க்காடே அதிகரித்து 197.3 மில்லியன் டன்களாக உள்ளது.

அமெரிக்காவில் கோதுமை பயிர் நிலங்கள் டீசல் உற்பத்திகான தானியக் களமாக மாற்றப்பட்டுள்ளதால் உலக அளவில் கோதுமைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாய நிலங்கள் ஒரு போதும் டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று பவார் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியா வருமாறு ரஷ்ய அதிபருக்கு மன்மோகன் அழைப்பு
ப்ளஸ் 2 - புதுவையில் தேர்ச்சி 4% குறைந்தது
மே.வங்க கவர்னர் மீது ஜோதி பாசு கடும் தாக்கு
அணு ஒப்பந்தத்திற்கு அரசியல் ஒருமித்த கருத்து அவசியம் : கமல்நாத்
லண்டன் ஏர்போர்ட் தாக்குதல்: பெங்களூர் திரும்பினார் சபீல்
ஜம்மு : தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace