யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மே.வங்க கவர்னர் மீது ஜோதி பாசு கடும் தாக்கு
கோல்கத்தா(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 13:54 IST )
மேற்கு வங்க கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி, தனது பதவிக்குரிய கவுரவத்துடன் நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜோதி பாசு குற்றம் சாட்டியுள்ளார்.

மின்வெட்டால் கோல்கத்தா நகர மக்கள் அவதியுறுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு, கவர்னர் மாளிகையில் தினம் இரண்டு மணி நேரம் மின் வெட்டை தானே அமல்படுத்திக் கொள்வதாக கோபால கிருஷ்ண காந்தி அண்மையில் அறிவித்திருந்தார்.

கவர்னரின் இந்த நடவடிக்கை, மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை அம்பலப்படுத்தி, தர்மசங்கட நிலையை ஏற்படுத்திவிட்டதாக அங்கு ஆட்சியிலுள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசு கருதியது.

இந்நிலையில், கவர்னரின் மேற்கூறிய அறிவிப்பை கடுமையாக குறை கூறியுள்ள ஜோதிபாசு, கவர்னர் பதவிக்குரிய கவுரவத்துடன் கோபால கிருஷ்ண காந்தி நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கோல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், அவரது இந்த செயல் அரசுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.

எந்த ஒரு விஷயம் குறித்தும் அவர் (கவர்னர் )எதுவும் தெரிவிக்க விரும்பினால் , சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்டுதான் தெரிவிக்க வேண்டும் என பாசு மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணு ஒப்பந்தத்திற்கு அரசியல் ஒருமித்த கருத்து அவசியம் : கமல்நாத்
லண்டன் ஏர்போர்ட் தாக்குதல்: பெங்களூர் திரும்பினார் சபீல்
ஜம்மு : தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
ஜீப்- டிராக்டர் மோதல்: 8 பேர் பலி
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் : கலாம் ஆதரவு
ராமர் பாலம்: தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace