|
| அணு ஒப்பந்தத்திற்கு அரசியல் ஒருமித்த கருத்து அவசியம் : கமல்நாத் |
| நியூயார்க் / புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 13:07 IST ) | |
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற விரிவான அரசியல் ஒருமித்த கருத்து அவசியம் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.
அமெரிக்கா வந்துள்ள கமல்நாத், அங்குள்ள் ஆசிய சங்கத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த் ஒப்பந்தத்தை அணுசக்தி ஒப்பந்தம் என்ற கோணத்தில் பார்ப்பதைவிட, எரி சக்தி ஒப்பந்தம் என்ற கோணத்தில் பார்ப்பது அவசியம்.
இந்தியாவில் பிரதமர்களும் , அரசுகளும் மாறினாலும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.அதேபோன்று மேற்கூறிய அணுசக்தி ஒப்பந்ததிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது அவசியமானது.
இந்தியாவில் மின்தேவைகளின் நிலை மிகவும் நெருக்கடியாக இருப்பதால், மாற்று மின்சக்தியை பெறுவதற்கு நிலக்கரி தொழில்நுட்பத்தை இந்திய அரசு தேடிக் கொண்டிருக்கிறது.
காற்றாலை மூலமாக ஏற்கனவே 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான மாற்று மின் உற்பத்தி ஆதாராங்களை விரிவுப்படுத்துவதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|