|
| லண்டன் ஏர்போர்ட் தாக்குதல்: பெங்களூர் திரும்பினார் சபீல் |
| பெங்களூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 12:59 IST ) | |
பிரிட்டன் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சபீல் அகமது, தண்டனை முடிந்து பெங்களூர் திரும்பினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில், எரியும் ஜீப்பில் சென்று தாக்குதல் நடத்த முயன்ற பெங்களூர் இன்ஜினியர் கபீல் அகமது உடல் கருகி பலியானார். இதில் தொடர்புடைய அவரது சகோதரர் டாக்டர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார்.
சதித்திட்டத்தை மூடி மறைத்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் அவருக்கு 18 மாத கால தண்டனையும் விதிக்கப்பட்டது.
விசாரணையின் போது அவர் சிறையில் இருந்த நாட்களையும் கணக்கிட்டதில், அவரது தண்டனை காலம் முடிவடைந்ததால், சபீல் அகமதுவை விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,நேற்றிரவு சபீல் அகமது பெங்களூர் திரும்பினார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் சபீல் அகமதுவின் உறவுமுறை சகோதரரான ஆஸ்திரேலியா டாக்டர் முகமது ஹனீப் தவறுதலாக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிடுக்கப்பட்டார்.
இந்நிலையில், டாக்டர் முகமது ஹனீப்பின் வழக்கு விபரங்கள் பற்றிய ஆவணங்களை வெளியிட முடியாது என அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|