|
| ஜம்மு : தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு |
| ஜம்மு(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 12:42 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
சம்பா பகுதியில் உள்ள பெங்க்லார்டு என்ற இடத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் எல்லைக்கப்பாலிலிருந்து இந்திய பகுதிக்குள் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை எல்லை பாதுக்காப்பு படையினர் கவனித்து விட்டனர்.
இதனையடுத்து அவர்களை இந்திய பகுதிக்குள் ஊடுருவ விடாமல் பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மற்றொரு இடத்திலிருந்து இன்னொரு தீவிரவாத கும்பல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சுமார் 15 நிமிட சண்டைக்கு பின்னர், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|