யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராமர் பாலம்: தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 18:36 IST )
ராம சேது பாலம் தொடர்பாக தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறியுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அவர்களுடன் இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது கடந்த 1ம் தேதியன்று இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது.இந்நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், நீதிபதி ஜே.எம்.பன்சால் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு கடந்த 6 ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்நிலையில், நேற்றும் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில், தான் தாக்கல் செய்த மனுவுக்கு தானே ஆஜராகி வாதாடிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, " ராமர் பாலத்தை இடித்துவிட்டுத்தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அந்த திட்டமே தேவையில்லை " என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அரசு தரப்பு வாதத்தை கேட்டறிந்த பின்னர் , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி ' ராம சேது ' பாலத்தை பழங்கால நினைவு சின்னமாக அறிவிக்க முடியுமா என்பதை கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறியுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இவ்வழக்கை வருகிற ஜூலை 22 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதிகள் , அதற்கு இடைப்பட்ட காலத்தில் சேது சமுத்திர திட்டத்தை வேறு வழி தடத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறியுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அன்புமணி ராமதாஸ் பதவியை பறிக்க பா.ஜ.வலியுறுத்தல்
பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 20 பயணிகள் பலி
ராஜினாமா இல்லை : அன்பு மணி ராமதாஸ்
ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
கர்நாடகா முதல் கட்ட தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது
ஜம்முவில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace