|
| பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 20 பயணிகள் பலி |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 16:23 IST ) | |
ஜம்மு காஷ்மீரில் ஆற்றுக்குள் பேருந்து பாய்ந்து 20 பயணிகள் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீரிலிருந்து 229 கி.மீ. தொலைவில் உள்ள கிஸ்த்வாரில் ஓர் பயணிகள் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்தனர்.
பல்லாரா புல் என்ற இடத்திலுள்ள ஒரு வளைவில் அந்த பேருந்து திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அருகேயுள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது. அப்போது, பேருந்தில் தூங்கிகொண்டிருந்த ஒரு பெண் உள்பட 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக வெளியே விழுந்தனர். மற்றவர்கள் பேருந்துடன் ஆற்றுக்குள் விழுந்து, நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அந்த பகுதியில் உள்ள தீயணைப்புப் படையினர், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
பேருந்து டிரைவரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|